மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
எதிர்பார்த்த விஷயம்தான் அது. தற்போது அது நடந்தேறி இருக்கிறது. தெலுங்குப்பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் வெளியான தினத்திலிருந்து சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. தென்னிந்திய சினிமா வரலாற்றில், இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை பாகுபலி ஏற்கெனவே பெற்றுவிட்டது. அடுத்து இந்திய அளவில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் தற்போது எட்டி இருக்கிறது பாகுபலி.
இந்திய அளவில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை இதுவரை தக்க வைத்துக் கொண்டிருந்தது அமீர்கான் நடித்த பீகே ஹிந்திப்படம் தான்! இப்பொது அந்த சாதனையை ராஜமௌலியின் பாகுபலி முறியடித்து, பீகேயை பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்த தகவலை சொன்னது யாரோ அல்ல, பிரபலமான போர்ப்ஸ் (forbes) பத்திரிகை.
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் இந்த புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது.
இந்திய அளவில் பாகுபலி இதுவரையில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாம். பீகே படத்தின் இந்திய அளவிலான அதிகபட்ச வசூல் சுமார் 440 கோடியாம். ஆக, 60 கோடி கூடுதலாக பாகுபலி வசூல் செய்துள்ளது.
740 கோடி ரூபாய் வசூலித்து உலக அளவிலான வசூல் சாதனையில் பீகே படம்தான் இன்னமும் முதல் இடத்தில் இருந்து வருகிறது. 594 கோடி வசூலித்த பஜ்ரங்கி பைஜான் படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 566 கோடி வசூல் செய்துள்ள பாகுபலி மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது.