தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபலி படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து டோலிவுட்டிலிருந்து வெளிவரும் மற்றுமொரு சரித்திர திரைப்படம் ருத்ரமாதேவி. இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை அனுஷ்கா ருத்ரமாதேவியாக நடித்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் கோன கண்ணா ரெட்டி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ராணா, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரின் திரேஷா போன்றோரும் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
செப்பட்டம்பர் 4 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. ருத்ரமாதேவி ரதம் என்ற பெயரில் ருத்ரமாதேவி பட போஸ்டர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்துடன் படக்குழுவினர் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். ருத்ரமாதேவி ரதம் என்ற வாகனத்தின் புகைப்படத்துடன் இத்தகவல் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் படக்குழுவினர் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை ரசிகர்களுடன் நேரடியாக பகிர்ந்து கொண்டு அது தொடர்பாக ரசிகர்களுக்கு போட்டிகளும் நடத்த திட்டமிட்டுள்ளனர். நடிகை அனுஷ்கா தான் ருத்ரமாதேவி ரதத்துடன் செல்பி எடுத்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.இந்த சுற்றுபயணத்தின் முக்கிய நிகழ்ச்சியில் நடிகை அனுஷ்காவும் கலந்து கொள்ளவார் என கூறப்படுகின்றது.