ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வணக்கம். பட்டங்கள் வைத்து அழைப்பது உங்களுக்குப் பிடிக்காது என்றாலும், 'ஆரஞ்சு மிட்டாய்' கைலாசமாக உங்களை பார்த்த பின், உங்களை இப்படித்தான் அழைக்கத் தோன்றுகிறது. பிழைப்புக்காக, ஊர் பிரிந்து வாழும் என்னைப் போன்றவர்களுக்குள், இனிப்பும், புளிப்புமாக ஏதேதோ நினைவுகளை உங்கள் படம் எழுப்பி விட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், 'தென்மேற்கு பருவக்காற்றாக' வந்து, கிராமத்து இளைஞனாக நம்பிக்கை விதைத்த உங்கள் கதாபாத்திரத்தின் கண்களில், ஒரு தாகமும், தேடலும் இருந்தன. இவை இரண்டும், ரசிகர்களிடம் தொடர்ந்து பெற்ற அங்கீகாரத்தால், நீங்கள் பயணித்த வித்தியாசமான பாதையில், பல வெற்றிகள் பரிணமித்தன. இந்த வகையில், 'ஆரஞ்சு மிட்டாய்' கைலாசம், ஒரு இதமான இம்சை. ஆம்... வித்தியாசமான கதைத் தேடல், அளவுக்கு மீறிய அமுதமாகி, ஒரு சின்ன வட்டத்திற்குள் உங்களை சிக்க வைத்து விட்டதோ என, என்னை சிந்திக்க வைத்தது, அரங்கில் ரசிகர்கள் அவ்வப்போது விடுத்த கொட்டாவி.
சின்னச் சின்ன வேடங்களில் வந்த உங்களை, வெற்றிகரமான ஒரு நாயகனாக்கி, ஒரு படத்தை தயாரிக்கும் அளவுக்கு வளர்த்து, வெற்றி பெற வைத்து, ரசிகர்கள் உங்களுக்கு தந்திருக்கும் அங்கீகாரம் மகத்தானது. அதற்காக நீங்கள் திருப்பிச் செய்யும் ஒரே நன்றி, அவ்வப்போதாவது அவர்களின் ரசனைக்கு ஜனரஞ்சகமாக விருந்து வைப்பது தான்!
சிறு துளிகளாக குளத்தில் சேர்ந்த மழைநீர், வெள்ளாமைக்காக துளித்துளியாக பாய்ந்தால், விளைச்சல் ஒருபோதும் வீடு வந்து சேராது. அதுபோல, இனியும், உங்கள் திறமைக்கு தீனி போடும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால், ஒரு நாள் ரசிகனின் நினைவில் மட்டுமே நிற்கும் நடிகனாக சினிமாவிலிருந்து ஒதுங்கிப் போவீர்கள்.
இனியாவது சுதாரித்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...