'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆர்யாவுக்கு அதிகம் பிடித்தமான நடிகை என்றால் அது நயன்தாராதான். இதை மேடைகளிலேயே சொல்லி வந்த அவர், தற்போது வெளியாகியுள்ள வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்திலும் நயன்தாரா மாதிரி பொண்ணு வேணும் என்றுதான் சுற்றிக்கொண்டிருப்பார். அப்போதுதான் தமன்னா அவர் கண்ணில் சிக்குவார். அதையடுத்து அவருக்கு நூல் விடத் தொடங்குவார். மேலும், இந்த படத்திற்கு கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று பரிசீலனை செய்தபோது, நயன்தாராவின் பெயரைதான் முன் வைத்திருக்கிறார் ஆர்யா. ஆனால் விஎஸ்ஓபி படமும் பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரியே கதை இருப்பதால் மீண்டும் அவரே நடித்தால் அதே சாயல் அப்படியே தெரியும் அதனால் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம் என்றாராம் டைரக்டர் ராஜேஷ்.எம்.