தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் கே.பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவுக்கும் சின்னத்திரை தொகுப்பாளினி கீர்த்திக்கும் வருகிற 21ந் தேதி திருமணம் நடக்கிறது. அதற்குள் இருவரும் மலேசியாவுக்கு சென்று டூயட் பாடிவிட்டு திரும்பியிருக்கிறார்கள். அதாவது இருவரும் லிப்ஸ்டிக் என்ற இசை ஆல்பத்துக்காக இணைந்து ஆடிவிட்டு வந்திருக்கிறார்கள்.
ஒரு புகழ்பெற்ற நடிகையின் படப்பிடிப்பு நடக்கிறது. அவரது ரசிகர் ஒருவர் அவரை புகழ்ந்து பாடிக்கொண்டே நடிகையின் கவனத்தை தன் பக்கம் திருப்ப நினைக்கிறார். கடைசியில் திருப்பி ஜோடி சேருவதுதான் ஆல்பத்தின் கான்செப்ட். "லிப்டிக்கு போட்டு தாக்குற புள்ள... லப்புடப்பு அடிக்குது ஹார்டுதான் உள்ள..." என்பது பாடல் வரி. இதற்கான நடனத்தை பிருந்தா அமைத்துள்ளார்.
ஆசிஸ் விஜய் கோத்தாரி இயக்கி உள்ளார். ஜெஃப்ரி இசை அமைத்துள்ளார். இந்த ஆல்பத்தை நயன்தாரா வெளியிட்டார். அதனை தன் வருங்கால மனைவி கீர்த்திக்கு சாந்தனு பரிசாக அளித்துள்ளார்.