ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ரானி, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் கோ 2. இந்தப் படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில் நா.முத்துக்குமார் எழுதியுள்ள உன்னை மாற்றினால்... என்ற, அப்துல கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் பாடல் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அப்துல் கலாமின் பேச்சில் அடங்கிய பொன் மொழிகளை வைத்து இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பாடலை படத்தில் இடம் பெற வைக்க வேண்டும் என்று எப்போதோ முடிவெடுத்துள்ளார்கள். ஆனால், அதற்குள் அப்துல் கலாம் மறைந்து விடவே, அந்தப் பாடலை அவருக்கு அஞ்சலியாக, சுதந்திர தினமான இன்று வெளியிட்டுள்ளார்கள்.
இந்தப் பாடலை எழுதிய நா.முத்துக்குமார் அந்தப் பாடல் பற்றிக் கூறுகையில், “படத்தின் இயக்குனர் சரத், அப்துல் கலாம் அவர்கள் இளைய தலைமுறையினரிடம் கனவு காணுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அப்படி அவர் பேசிய பேச்சுக்கள் மாணவ, மாணவிகளிடம் ஒரு உத்வேகத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு அவருடைய பேச்சுக்களைப் பிரதிபலிக்கும் விதமாக இந்தப் பாடல் அமைய வேண்டும் என்றார். அந்த எழுச்சி இந்தப் பாடலிலும் இருக்கும் அளவிற்கு எழுதியிருக்கிறேன். லியோன் ஜேம்ஸ் அதற்கு அற்புதமான இசையை அமைத்துள்ளார்,” என்றார் நா.முத்துக்குமார்.
பாடலை காண இங்கே கிளிக் செய்யவும் : https://www.youtube.com/watch?v=wISLaYPXp0E&feature=youtu.be