டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கமல்ஹாசனின் ஆஸ்தான நடிகர் யூகி சேது. பஞ்சதந்திரம், அன்பே சிவம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பல குறும்படங்களை இயக்கி உள்ளார். சின்னத்திரை தொகுப்பாளர், திரைப்பட விமர்சகர் என்ற பல முகங்களைக் கொண்டவர்.
இவர் ஒரு படத்தின் வெற்றியை முன்கூட்டியே தீர்மானிப்பது எப்படி என்கிற ஆய்வு அறிக்கை ஒன்றை சென்னை பல்கலைகழத்தில் சமர்ப்பித்திருந்தார். அதனை ஏற்று சென்னை பல்கலைகழகம் அவருக்கு டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்கி உள்ளது. "பல படங்களை பற்றி ஆய்வு செய்து, வெற்றி தோல்வி எதனால் ஏற்படுகிறது. என்பதை பற்றி தெளிவு படுத்தி இந்த ஆராய்ச்சி கட்டுரையை எழுதினேன். இது வெற்றிகரமான திரைப்படங்கள் எடுக்க விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். திரைப்படத் துறைக்கு என்னால் இயன்ற இந்த பணியை செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி" என்கிறார் யூகி சேது.