600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தென்னிந்திய சினிமாவை கலக்கிய அசின் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வந்தார். தற்போது அவர் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார். மைக்ரோ மேக்ஸ் அதிபர் ராகுல் சர்மாவை அவர் காதலிப்பதும், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அசின் நடித்துள்ள ஆல் இஸ் வெல் படம் விரைவில் வௌியாக இருக்கிறது. இதில் அசின் உடன் மாஜி ஹீரோ ரிஷி கபூரும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
அசினின் காதல் விவகாரம் பற்றி ரிஷி கபூர் கூறியிருப்பதாவது... அசின், ராகுல் சர்மாவை தீவிரமாக காதலிப்பது எனக்கு தெரியும். ஆல் இஸ் வெல் என்ற ஒரு படத்தில் மட்டும் தான் அவர் கமிட்டானார். வேறு எந்த படங்களையும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. நீண்டகாலமாக சினிமாவில் அசின் இருந்து வருகிறார். அவர் காதலிப்பது மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார்.