ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிகே படத்திற்கு அமீர்கான் நடிக்க இருக்கும் படம் ''டங்கல்''. சமீபத்தில், இப்படத்தில் அவருக்கு மனைவியாக நடிப்பதற்கான நடிகை தேர்வு நடந்தது. சுமார் 70 பேரை ஆடிசனுக்கு அழைத்துள்ளனர். இதில் சின்னத்திரையில் பிரபலமாக விளங்கும் சாக்ஷி தன்வார் உள்ளிட்ட நடிகைகள் சிலரும் பங்கேற்றுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் அமீர்கானுக்கு செட்டாகவில்லை. காரணம் அவர்களது நடிப்பில் செயற்கை தனம் தெரிந்துள்ளது. அதேசமயம், நடிகை சாக்ஷி தன்வாரிடம் சில நடிப்புதிறன் வௌிப்பட்டுள்ளது. இதனையடுத்து, அமீர்கான், இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து ஆலோசித்து சாக்ஷியையே, அமீர்கானுக்கு மனைவியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் டங்கல் படத்தில் சாக்ஷி தான் அமீர்கானின் மனைவியாக நடிக்க இருக்கிறார்.
சாக்ஷி தன்வார், பார்வதி, கஹானி கர் கர் கி, உள்ளிட்ட பிரபல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் கூட பாலிமர் டிவியில், ஔிப்பரப்பட்ட உள்ளம் கேட்குமே டப்பிங் தொடரில் வந்தவர் தான் இந்த சாக்ஷி என்பது குறிப்பிடத்தக்கது.