Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

6 நாட்களில் ரூ.56 கோடி வசூலை குவித்த ஸ்ரீமந்துடு!

14 ஆக, 2015 - 14:10 IST
எழுத்தின் அளவு:
Srimanthudu-Collection-detail

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சமூக சிந்தனையுடன் களம் இறங்கிய திரைப்படம் ஸ்ரீமந்துடு, தமிழில் செல்வந்தன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து திரைக்கு வந்தது. இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில், நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்த இப்படம் உலக அளவில் ரூ.56 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஸ்ரீமந்துடு படத்திற்கு நடிகர் மகேஷ் பாபுவின் நடிப்பும் திரைக்கதையும் பலம் சேர்த்தது. இதனால் கிடைத்த நேர்மறையான விமர்சனங்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. இப்படம் திரைக்கு வந்து ஆறு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.56 கோடியும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் ரூ.36.66 கோடியும் வசூல் செய்துள்ளது. மேலும் பெரிய படங்கள் எதுவும் திரைக்கு வராததால் இந்த வாரமும் ஸ்ரீமந்துடு படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கூடும் என தெரிகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள ஸ்ரீமந்துடு படக்குழுவினர் விரைவில் வெற்றி விழா கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in