தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகரான இன்னொசன்ட் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விபரத்தையும், கீமோதெரபி சிகிச்சைக்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் விபரத்தையும் இரு தினங்களுக்கு முன்னர் தான் குறிப்பிட்டிருந்தோம்.. ஆனால் மலையாள நடிகர் சங்கத்தலைவரும், பார்லிமென்ட் உறுப்பினருமான இன்னொசன்ட், இப்போது இன்னும் நவீன சிகிச்சை பெறுவதற்காக டில்லியில் இருந்து அமெரிக்க செல்ல இருக்கிறார்..
எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் சீனியர் டாக்டர் ஒருவர் இன்னொசன்ட்டின் உறவினர் ஆவார். அவரது பரிந்துரையின் பேரில் தான் இன்னொசன்ட் அமெரிக்க சென்று சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார். இன்னோசன்ட்டும் அவரது மனைவியும் விரைவாக மெரிக்கா செல்வதற்கான வேலைகளை அந்த டாக்டர்தான் கவனித்து வருகிறார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே கேன்சரின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இன்னொசன்ட் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு, கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.