Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பணத்தாசையால் சீரழிந்துவிட்டேன் - இயக்குனர் வி.சேகர் வாக்குமூலம்

14 ஆக, 2015 - 10:07 IST
எழுத்தின் அளவு:
Statue-Smuggling---V.Sekars-statement

பிரபல சினிமா பட இயக்குனர் வி.சேகர் பஞ்சலோக சாமி சிலைகள் கடத்தல் தொழிலில் இறங்கியது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் வி.சேகர். திருவள்ளுவர் கலைக்கூடம் என்ற பெயரில் குடும்ப பாங்கான படங்களை இயக்கி குடும்ப இயக்குனர் என்ற தகுதியை பெற்றிருந்தார். அவர் பஞ்சலோக சாமி சிலைகளை கடத்தியாக போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.


அவருடன் சிலை கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாலதி என்பவர் போலீசாரிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலம்:


என் சகோதரர் கருணாகரன் சென்னையில் அரசு அச்சக ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு சினிமா துறையில் நண்பர்கள் அதிகம். சினிமா படப்பிடிப்புகளில் லைட்மேன் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட ஜெயக்குமார் பட தயாரிப்பு மேலாளர் தனலிங்கம் மற்றும் சபரீசன் தமீம் சண்முகம் விஞ்ஞானி ஜாய்சன் முஸ்தபா ஆகியோர் என் சகோதரரின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தனர்.


இவர்கள் அனைவரும் சென்னை கே.கே.நகரில் திருவள்ளுவர் கலைக்கூடம் என்ற பெயரில் சினிமா படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த இயக்குனர் வி.சேகருடன் நண்பர்களாக இருந்தனர்.அதில் ஜெயக்குமாருக்கு சிலை கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. சிலைகளை கடத்தினால் கோடிகளை குவிக்கலாம் என வி.சேகரிடம் ஆசை காட்ட அவரும் பண கஷ்டத்தில் இருந்ததால் பஞ்சலோக சாமி சிலைகளை கடத்தி மும்பையில் உள்ள வியாபாரிகள் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்த வி.சேகர் முடிவு செய்தார்.


அதற்காக மும்பை வியாபாரிகள் சென்னையில் போட்ட ரகசிய கூட்டங்களில் பங்கேற்றார்; கடத்தலுக்கான சதி திட்டத்தையும் தீட்டி கொடுத்தார். சர்வதேச சந்தையில் சோழர் கால சிலைக்கு கிராக்கி அதிகம். அதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோழர் கால சிலைகளை தேடி அலைந்தோம்.


ஒருநாள் என் வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் சுவரில் மாட்டியிருந்த காலண்டரில் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோவில் பஞ்சலோக சிலைகளின் படங்களை பார்த்தார். உற்சாகம் அடைந்த அவர் என்னையும் என் சகோதரர் கருணாகரன், மாரிஸ்வரன், விஜயராகவன், சண்முகம், சபரீசன் ஆகியோரையும் அந்த கோவிலுக்கு சாமி கும்பிடுவதுபோல் அழைத்து சென்றார்.


நான் பூஜாரியிடம் பேச்சு கொடுக்க சிலைகளை அவர்கள் நோட்டமிட்டனர். அதுபோல் திருவண்ணாமலை மாவட்டம் பையூர் வெங்கடேச பெருமாள் கோவில் மற்றும் அதே ஊரில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவில் சிலைகளை நோட்டமிட்டு அதை படம் எடுத்து வந்து இயக்குனர் வி.சேகரிடம் காட்டினோம். அவரும் ஓகே செய்தார்.


இதையடுத்து கடந்த பிப்ரவரி 6 மற்றும் 10ம் தேதிகளில் நானும் கருணாகரனும் காரில் உட்கார்ந்து கொள்ள சண்முகம் விஜயராகவன் மாரிஸ்வரன் ஆகியோர் இரவு 11:30 மணியளவில் கையுறை இரும்பு கட்டர் உதவியுடன் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சிவன் பார்வதி, ஸ்ரீதேவி, பூதேவி இரண்டு பெருமாள் சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட எட்டு சிலைகளை கடத்தி வந்தனர்.


அதற்காக வி.சேகர் மூலம் ஜெயக்குமார் கொடுத்த ஐந்து லட்சம் ரூபாயை சண்முகம் உள்ளிட்டோருக்கு கூலியாக கொடுத்தேன். தங்கக்காசு, வெள்ளிப் பொருட்களை அவர்கள் பிரித்துக்கொண்டனர். சிலைகளை திருவண்ணாமலையில் உள்ள என் வீட்டிற்கு காரில் கடத்தி வந்தோம். சுங்குவார்சத்திரம் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.


நான் பத்திரிகை நிருபர் அடையாள அட்டையை காட்டி செய்தியாளர் சந்திப்புக்கு சென்று வருவதாக கூறி தப்பினோம். அப்போது போலீசார் சோதனையிட்டு இருந்தால் அன்றைக்கே மாட்டி இருப்போம்.


அதன்பின் சிலைகளை சென்னைக்கு கொண்டு வந்து இயக்குனர் வி.சேகரிடம் ஒப்படைத்தோம்; வெரிகுட் என்றார். ஒரு மாதம் அந்த சிலைகள் திருவள்ளுவர் கலைக்கூட அலுவலகத்திலேயே வைத்து வியாபாரம் பேசினார்.பேசியபடி சிலைகளை வி.சேகரால் விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் சிலைகளை ஜெயக்குமார் மேற்கு மாம்பலத்தில் உள்ள பைனான்ஸ் நிறுவன அதிபர் ஒருவரிடம் ஒப்படைத்தார். அவராலும் சிலைகளை விற்க முடியவில்லை.


இதனால் கோடம்பாக்கத்தில் உள்ள தனலிங்கம் வீட்டிற்கு ஆட்டோவில் சிலைகளை எடுத்த சென்றபோது தான் போலீசில் தனலிங்கம் மாட்டிக்கொண்டான்.அவன் ஜாமினில் வெளிவந்த பின் அவனை ஜெயக்குமார் மற்றும் வி.சேகர் ரகசிய இடத்தில் சந்தித்து பணம் கொடுத்து தங்களை காட்டி கொடுத்துவிட வேண்டாம் என தெரிவித்தனர்.


ஆனால் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் எங்களை பற்றி அவன் போட்டு கொடுத்ததால் போலீசார் எங்களை நெருங்கினர். நான் அப்ரூவராக மாறினேன். வி.சேகர் தனலிங்கம் கருணாகரன் தவிர ஜெயக்குமார் உள்ளிட்டோர்தலைமறைவாகி விட்டனர்.இவ்வாறு மாலதி தெரிவித்துள்ளார்.


இ.ஓ.க்கள் அலட்சியம்:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோவிலில் சிவன் பார்வதி சிலைகள் திருடுபோன பின் பிப்ரவரி 17ம் தேதி நடந்த சிவராத்திரி விழாவிற்கு 10 நாட்கள் முன் 28 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செய்யப்பட்ட சிவன் மற்றும் பார்வதி உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.


ஆனால் காணாமல் போன சிலைகளின் படமோ ஆவணமோ கோவில் செயல் அலுவலரிடம் இல்லை. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சிலைகளை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும் என செயல் அலுவலர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தபோதிலும் செயல் அதிகாரிகளான இ.ஓ.க்கள் சிலைகளை ஆவணப்படுத்துவதில் அலட்சியம் காட்டுகின்றனர்.


இதுகுறித்து சிலை கடத்தப்பட்ட சமயத்தில் செயல் அலுவலராக இருந்த கருப்பையா கூறுகையில் நான் மதுராந்தகம் வட்டத்தின் செயலர் அலுவலர். ஆறு மாதங்களாக ஸ்ரீபெரும்புதுார் வட்டத்தின் செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தேன். அதனால் கோவில் சிலைகளை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த முடியவில்லை என்றார்.


பணத்தாசையால் சீரழிந்துவிட்டேன்


சினிமா பட இயக்குனர் வி.சேகர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:சிறந்த படங்களை எடுக்க வேண்டும் என்பது என் கொள்கை. அதன்படியே ஆபாச வசனமின்றி குத்துப்பாட்டு இல்லாமல் 17 படங்கள் எடுத்தேன். சினிமா தயாரிப்பில் இறங்கி கடனில் மாட்டிக்கொண்டேன்.மேலும் கூடா நட்பின் காரணமாக பணத்தாசை ஏற்பட்டு சீரழிந்துவிட்டேன்.


இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in