அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
வார்த்தைகளை மளமளவென கொட்டி சரசரவென பேசுவதுதான் காமெடி நடிகர் சூரியின் தனித் திறமை. அதை பார்த்துதான் ரசிகன் சிரித்து விட்டு வருகிறான். ஆனால் அதே சூரி கத்துக்குட்டி படத்தில் 6 வார்த்தைகள் கொண்ட ஒரு வசனத்தை பேச 11 டேக்குகள் வாங்கியதை படத்தின் புரமோஷன் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள்.
டீக்கடையில் ஒரு கிராமத்து மீசைக்காரர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். எதிரில் இருக்கும் ஒருவரிடம் "24 பக்க பேப்பரில் எதை படிக்கணும்னு முதல்ல கத்துக்க" என்றபடி அவரிடமிருந்த பேப்பரை பிடுங்க வேண்டும். இதுதான் காட்சி. இந்த 6 வார்த்தை வசனத்தை பேசி நடிக்க சூரி 11 டேக்குகள் வாங்கியதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்படுகிறது. இந்த வீடியோ படத்தின் புரமோசனுக்கு உதவுகிறதோ இல்லையோ சூரியின் கெப்பாசிட்டி இதுதான் என்று வெளிச்சம்போட்டு காட்டுகிறது வீடியோ.
நரேன், சிருஷ்டி டாங்கே நடித்துள்ள இந்தப் படத்தை சரவணன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். அருள்தேவ் இசை அமைத்துள்ளார், சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமிய பின்னணி கொண்ட காமெடி காதல் படம். விரைவில் வெளிவர இருக்கிறது.