அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

இயக்குனர் சுந்தர்.சி தற்போது அரண்மணை 2 படத்தை இயக்கி வருகிறார். இது காமெடி பேய் படம். பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. அதேபோல சிறிய பட்ஜெட்டில் ''ஹலோ நான் பேய் பேசுகிறேன்'' என்ற காமெடி பேய் படத்தை தயாரிக்கிறார். இதில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, வி.டி.வி.கணேஷ், கருணாகரன் நடிக்கிறார்கள். சித்தார்த் விபின் இசை அமைக்கிறார், பானு முருகன் ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.பாஸ்கர் இயக்குகிறார்.
இது செல்போன் காலம், செல்போன் இல்லாதவர்களே இல்லை எனவே ஒரு பேய் செல்போன் மூலமாக தனக்கு பிடிக்காதவர்களை டார்ச்சர் செய்யும் கதையாம். இதில் ஐஸ்வர்யா பேயாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதாவது டெலி ஷாப்பிங்கில் செய்யும் ஐஸ்வர்யாவுக்குள் பேய் புகுந்து கஸ்டமர்களை போனில் கூப்பிட்டு டார்ச்சர் செய்யுமாம். படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. அரண்மணை இரண்டாம் பாகத்துக்கு முன்னதாக வெளிவரலாம் என்று கூறப்படுறது.