ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
என்னுடைய இயக்கத்தில், நடிகர் அஜித் நடிக்க சம்மதிக்கும் பட்சத்தில், அடுத்த கணமே, அவர் முன்போய் நிற்பேன் என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.
ரஜினி நடித்த பில்லா படம் எப்போது அந்த காலத்தில் பேமஸாக அமைந்ததோ, 2007ம் ஆண்டில், விஷ்ணுவர்த்ன இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம், அமோக வெற்றி பெற்றது. பில்லா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சக்ரி டோலட்டி இயக்கத்தில் வெளியான பில்லா 2 படம், தோல்வியை தான் தழுவியது.
விஷ்ணுவர்தன் - அஜித் வெற்றிக்கூட்டணி 2013ம் ஆண்டு, ஆரம்பம் படம் மூலம் மீண்டும் இணைந்தது.. ஆரம்பம் படமும், வெற்றி பெற்றது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள யட்சன் படம், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. தற்போது அந்த படத்திற்கான போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, சினிமா இணையதளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், விஷ்ணுவர்தன் கூறியுள்ளதாவது, தற்போது என்னிடம் 6 கதைகள் உள்ளது. ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைகள். இதனிடையே, தனது அடுத்த படத்தில், யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து இதுவரை எம்முடிவும் செய்யவில்லை.
தனது படத்தில், அஜித் நடிக்க ஒப்புதல் தெரிவித்து எனக்கு அழைப்பு விடுத்தால், மீண்டும் அவருடன் இணைந்து படம் பண்ண தயாராக இருப்பதாக விஷ்ணுவர்தன் கூறினார்.