ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள நடிகைகளுக்கு இது திருமண சீசன் போலும்.. இப்போதுதான் நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபரை திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல் வைரலாகிக்கொண்டு இருக்க, இதோ தாமிரபரணி படத்தில் அறிமுகமான பானு என்கிற முக்தா ஜார்ஜும் திருமண பந்தத்தில் உள்ளே நுழையப்போகிறார். 2005ல் பிரபல மலையாள இயக்குனர் லால்ஜோஸ் இயக்கிய 'அச்சனுறங்காத வீடு' படத்தில் அறிமுகமான பானு, தமிழில் இயக்குனர் ஹரியால் தாமிரபரணி படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார்.
சினிமாவில் பத்து வருட காலம் ஒரு வழியாக தாக்குப்பிடித்து நின்ற பானு, இதுதான் சரியான் தருணம் என திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார். மலையாள சினிமாவில் பாடகியும், சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வருபவருமான ரிமி டாமியின் சகோதரர் ரிங்கு டாமி தான் பானுவின் மனம் கவர்ந்த மணாளன். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் வரும் ஆகஸ்ட்-23ல் கொச்சியில் நடைபெற இருக்கிறது. சரியாக ஒரு வாரம் கழித்து ஆகஸ்ட்-30ல் எர்ணகுளத்தில் உள்ள எடப்பள்ளி சர்ச்சில் திருமணம் நடைபெற இருக்கிறது.