தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 98வது திரைப்படமான லயன் பெரும் வெற்றி அடைந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா தனது அடுத்த படத்தில் தீவிரமாக நடித்து வருகின்றார். லௌக்கியம் பட புகழ் இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கும் இப்படத்தில் நடிகைகள் அஞ்சலி மற்றும் சோனல் சௌகன் நாயகிகளாக நடிக்கின்றனர். ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார். இப்படத்தில் இளமை துள்ளலோடு தோன்ற பாலகிருஷ்ணா தனது உடல் எடையில் 12 கிலோ வரையில் குறைத்து கச்சிதமான உடற்கட்டுடன் நடிக்கின்றார். தற்போது இப்படத்தில் இடம் பெறும் பாலகிருஷ்ணாவின் அறிமுக பாடலுக்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறுகின்றது. இப்படம் பாலகிருஷ்ணாவின் 99வது படம் என்பதால் அதனைக் குறிக்கும் வண்ணம் இந்த அறிமுக பாடலில் 99 நடன கலைஞர்கள் நடனமாடுகின்றார்களாம். மேலும் இது போன்ற 99 என்ற செண்டிமெண்ட்டை இப்படம் முழுதும் பல இடங்களில் காண நேரிடும் என டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.