கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சமீபத்தில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் தென்னிந்திய பிரபல நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டிருக்க, கன்னட நடிகையான ஹர்ஷிகா பூனாச்சாவோ, ஒபாமாவையும் அவரது மனைவி மிச்செலையும் வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாடி வந்திருக்கிறார். இந்த வருடம் அமெரிக்காவுக்கு விடுமுறையை கழிப்பதற்காக சென்றிருந்த ஹர்ஷிகாவுக்கு ஒபாமாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. ஆனால் அதே தேதியில் துபாயில் சைமா விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது..
சைமா விழாவில் அடுத்த வருடம் கூட கலந்துகொள்ளலாம். ஆனால் ஒபாமாவை அவரது மனைவியுடன் சேர்ந்து சந்திக்கும் பாக்கியம் திரும்பவும் கிடைப்பது அரிது என்பதால் விழாவுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வெள்ளை மாளிகைக்கு விசிட் அடிக்க போய்விட்டாராம் ஹர்ஷிகா பூனாச்சா. அதுசரி.. யார் இந்த ஹார்ஷிகா பூனாச்சா என்றுதானே கேட்கிறீர்கள்.?
கடந்த வருடம் சிம்புவும் ஒரு நடிகையும் இணைந்த லிப்லாக் கிஸ்ஸிங் வீடியோ ஒன்று வெளியாகி செம பரபரப்பை கிளப்பியது அல்லவா..? அதில் இருந்ததாக சொல்லப்பட்டவர் தான் இந்த ஹர்ஷிகா பூனாச்சா.. அந்த வீடியோவில் இருப்பது தாங்கள் இருவரும் இல்லை என அவர்கள் மறுத்தது வேறு விஷயம்.. கடந்த வருடம் இதேபோல சைமா விருது வழங்கும் விழா நடந்தபோது சிம்புவுடன் நட்பானவர் தான் இந்த ஹர்ஷிகா.