'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |
தமிழில் நம்பர்-1 நாயகியாக வலம் வந்த நடிகை அசின், இந்தி கஜனி மூலம் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வலம் வந்தார். இடையில் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த அசின், தற்போது ''ஆல் இஸ் வெல்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இம்மாதம் இறுதியில் வௌியாக இருக்கிறது.
இந்நிலையில் நடிகை அசினுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்தியாவின் பிரபல செல்போன் நிறுவனமான மைக்ரோ மேக்ஸ் மொபைல் நிறுவனத்தின் அதிபர் ராகுல் சர்மாவை, அசின் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
அக்ஷ்ய் குமாருடன் கில்லாடி 786 படத்தில் நடிக்கும் காலம் தொட்டே, ராகுல் சர்மாவை அவருக்கு தெரியும் என்றும், ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இருவர் பின்னர் காதலில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்ததாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த திருமணம் பற்றிய அறிவிப்புகள் வௌியாகலாம் என தெரிகிறது.
இதனிடையே நடிகை அசினும், ''நான் எனது எல்லா சினிமா சம்பந்தப்பட்ட கமிட்மென்ட்டுகளையும் விரைவாக முடிக்க இருக்கிறேன், புதிய படங்களுக்கு வாய்ப்பு வந்தபோது அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இனி என் தனிப்பட்ட வாழ்க்கை அதிக முக்கியத்துவம் தர போகிறேன்'' என்று கூறியுள்ளார்.
அசினின் இந்த பதிவு அவர் சினிமாவிற்கு முழுக்கு போடுவதையும், அவர் விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருப்பதையும் காட்டுவதாக பேசிக்கொள்கிறார்கள்.