பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
வேந்தர் தொலைக்காட்சியில் ஸ்டார் கிச்சன் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜீவிதா சமையல் நிகழ்ச்சியின் ராணியாக கொண்டாடப்படுகிறார். அழகுக்கு அழகு, ருசிக்கு ருசி என நிகழ்ச்சியை கலகலப்பாகவும், கலர்புல்லாகவும் நடத்தி வருகிறார். மேற்படிப்பு, சினிமாவில் நடிப்பு என்கிற இரண்டு வாய்ப்புகள் முன் நின்றபோது அதில் நடிப்புக்கு நோ சொல்லிவிட்டு படிப்புக்கு ஓகே சொல்லியிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சத்தியமாக சொல்கிறேன். ஸ்டார் கிச்சன் நிகழ்ச்சிக்கு முன்னாடி நான் எங்க வீட்டு கிச்சன் பக்கமே போனதில்லை. மற்றவர்கள் ருசியாக சமைத்து வைத்திருந்தால் புல் கட்டு கட்டத்தான் தெரியும். இப்போது ஒவ்வொருவரும் சமைப்பதை பார்த்து இது எவ்வளவு பெரிய கலை என்பதை உணர்ந்து நானும் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்.