அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
சர்ச்சை இயக்குனர் சாமி, தன் மீது நிலவி வந்த ஆபாச இயக்குனர் என்கிற அடையாளத்தை போக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்கிய படம் கங்காரு. அதற்கு முன்பு செக்ஸ் பிரச்சினைகளை மையமாக வைத்து படம் இயக்கி வந்த அவர், முதன்முறையாக கங்காரு படத்தை அண்ணன்-தங்கை பாசத்தை மையக்கருவாக வைத்து இயக்கினார். அந்த படத்தில் அர்ஜூனா, பிரியங்கா, ஆர்.சுந்தர்ராஜன், தம்பி ராமைய்யா, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்தனர்.
அந்த படத்தை தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இவர் தற்போது இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். அந்த படத்திற்கு திருப்பதி லட்டு என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கங்காரு படத்தை தயாரித்தபோதே படம் இயக்குவதின் நுட்பங்களை தெரிந்து கொண்ட சுரேஷ் காமாட்சி இந்த படத்தை பக்கா கமர்சியல் கதையில் இயக்குகிறாராம்.