Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகாவின் இளவரசி அனுபவம்!

09 ஆக, 2015 - 09:33 IST
எழுத்தின் அளவு:
Hansika-s-princess-role-experience

வேலாயுதம் படத்தில் விஜய்யின் முறைப்பெண்ணாக நடித்தவர் ஹன்சிகா. அதற்கு முன்பு மாடர்ன் கெட்டப்பில் மட்டுமே நடித்திருந்த அவரை அந்த படத்தில் கிராமத்து தேவதையாக காண்பித்திருந்தார் டைரக்டர் ஜெயம்ராஜா. அதன்பிறகுதான் மாடர்ன் பெண்ணான ஹன்சிகாவை கிராமத்து கதைகளுக்கும் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.


மேலும், அந்த படத்திற்கு பிறகு விஜய்யுடன் நடிக்க பலமுறை முயற்சி எடுத்து தோல்வி கண்டு வந்த ஹன்சிகா, ஒருகட்டத்தில் தனது முயற்சியை கைவிட்டு விட்டார். ஆனால் அப்போதுதான் புலி படத்தை இயக்கயிருந்த சிம்புதேவன், இளவரசி வேடத்துக்கு எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் என்று பரிசீலனை செய்தபோது ஹன்சிகாதான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை புக் பண்ணினார்.


ஆக, புலி படத்தில் ஹன்சிகா நடித்துள்ள இளவரசி வேடம் அவரைத் தேடி சென்றது. அதனால் மிகுந்த சந்தோசமடைந்த ஹன்சிகா, சம்பளம் பற்றி வாயே திறக்காமல் கால்சீட் தேதிகளை அள்ளிக்கொடுத்து புலி படத்தில் கமிட்டானார். அதோடு, இளவரசி காஸ்டியூமில் அச்சுஅசல் அவர் இளவரசியாகவே இருந்ததால் யூனிட் நபர்களே அவருடன் நின்று அவ்வப்போது போட்டோக்கள் எடுத்துக் கொண்டார்களாம்.


அதோடு, படப்பிடிப்பு தளங்களில் அவரை நிஜமாலுமே ஒரு இளவரசியைப் போன்றுதான் பராமரித்துக்கொண்டார்களாம். அதனால் அந்த படத்தில் நடித்து வந்தபோது தன்னை ஒரு நிஜ இளவரசி போன்றே உணர்ந்தாராம் ஹன்சிகா. இதை புலி படத்தின் படப்பிடிப்பு முடிந்த அன்று மனம் விட்டு அனைவரிடமும் தெரிவித்து விட்டு விடைபெற்றிருக்கிறார் அவர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in