'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் பானு. இது ஒரு முஸ்லிம் பெண்ணுக்கும், கடவுளை நம்பாத ஒரு நாத்திக இளைஞனுக்குமான காதல் கதை. காதலுக்காக அந்தப் பெண் தன் மதத்தை விட்டுக் கொடுத்தாரா அல்லது அந்த இளைஞர் தன் கொள்கையை விட்டுக் கொடுத்தாரா என்பது திரைக்கதை. ஜி.வி.சீனு ஹீரோவாக நடித்து இயக்கி உள்ளார். உதயராஜ் இன்னொரு ஹீரோ. நந்தினிஸ்ரீ, பானுவாக நடிக்கிறார். சுஜிபாலா ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியிருக்கிறார். அப்துல் ரகுமான் ஒளிப்பதிவு செய்துள்ளார், உதயராஜ் இசை அமைத்துள்ளார்.
"படத்தின் கதை பிரச்சினைக்குரியது போல தெரிந்தாலும் ஜாலியான காமெடி கதை. யாரையும் புண்படுத்தாமல் எடுத்திருக்கிறோம். தணிக்கை குழு எந்த கட்டும் இல்லாமல் யு சான்றிதழ் கொடுத்துள்ளது. மும்பை, சென்னை பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த மாதம் திரைக்கு வருகிறது" என்றார் இயக்குனர் சீனு.