Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் ரசிகர்களுக்கு இந்தாண்டு தல தீபாவளி தான்..!

06 ஆக, 2015 - 07:58 IST
எழுத்தின் அளவு:
Thala-56-movie-release-in-diwali

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் இடைவிடாமல் நடந்து கொண்டு வருகிறது. அஜித் ஜோடியாக முதன் முறையாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். ஸ்ருதி அஜித் ஜோடியாகவும், லட்சுமி அஜித் தங்கையாகவும் நடிக்கிறார்கள். 'வீரம்' படத்தில் சிவாவின் இயக்கத்தில் மிகவும் திருப்தியடைந்த அஜித் மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்க அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதே சம்மதம் கொடுத்திருந்தார். 'என்னை அறிந்தால்' படம் முடிவடைந்ததும் தன்னுடைய அடுத்த படமாக மீண்டும் அஜித்தை வைத்து இயக்க ஆரம்பித்துவிட்டார்.


தொடர்ந்து தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் குடும்பத்தினர் தயாரிக்கும் அடுத்தடுத்த படங்களுக்கு அஜித் தற்போது கால்ஷீட் கொடுத்து வருவது திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ஆரம்பம், என்னை அறிந்தால்' ஆகிய படங்களை அடுத்து இந்தப் புதிய படத்தையும் ஏ.எம்.ரத்தினத்தின் குடும்பத்தினர்தான் தயாரித்து வருகிறார்கள். அஜித்தை வைத்து பலர் படங்களைத் தயாரிக்க காத்துக் கொண்டிருக்க அவரோ ஏ.எம்.ரத்தினத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் திரையுலகில் ஒரு பேச்சு எழுந்துள்ளது. இடையில் மட்டும் 'வீரம்' படத்தை பழம் பெரும் நிறுவனமான விஜயா புரொக்ஷன்ஸுக்காக நடித்துக் கொடுத்தார்.


அஜித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு சுமார் 70 சதவீதம் வரை முடிந்து விட்டதாம். செப்டம்பர் மாதத் துவக்கத்தில் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்கிறார்கள். படம் தீபாவளிக்கு வருவது உறுதி என ஏ.எம்.ரத்னமும் ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in