வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
எவ்வளவு படங்களில் நடித்தாலும் நல்ல விஷயங்களை விட்டுவிட்டு கெட்ட விஷயங்களைப் பிடித்துக் கொளவ்து நம் பழக்கமாகி விட்டது என்று நடிகர் ஜீவா புலம்புகிறார். சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா சொன்ன வசனம் மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லு இதை ஜீவா எங்கே போனலும் சொல்கிறார்களாம் இதனால் வருத்தப்படுகிறார். ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதே ஜீவாவைத் துரத்தும் கேள்வியாக உள்ளதாம்.
புலி ஆடியோ விழாவில் விஜய்யின் நட்பைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டிருந்தார் ஜீவா. அப்போது ரசிகர்கள் மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லு என்று கத்தினார்கள். எங்கு போனாலும் விடாது கருப்பாக மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லு என்னைத் துரத்துகிறது என்று வருந்துகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? இனியாவது நடிக்கும் காட்சிகளில் பேசும் வசனங்களில் பொறுப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்பதுதானே. செய்வாரா ஜீவா?