இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெற்றி பெற்ற கத்தி திரைப்படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. பவன் கல்யாண் நடிக்க மறுத்த கத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர் அப்படம் குறித்த எந்த தகவலும் இல்லை. தற்போது டோலிவுட்டில் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த தகவல்கள் வெளிவர துவங்கியுள்ளன.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் டெம்பர் படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது இயக்குநர் சுகுமார் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். தயாரிப்பாளார் பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரித்து வரும் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். இப்படத்திற்கு அடுத்ததாக கத்தி ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இயக்குநர் முருகதாஸ்தெலுங்கு ரசிகர்களுக்கேற்ப கத்தி படத்தின் திரைக்கதையில் மாற்றம் செய்து வருகின்றார்.தயாரிப்பாளர் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் முதல் ரீமேக் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இயக்குநர், நாயகி உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் விபரம் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.