'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரித்த படம் மதயானைக்கூட்டம். இந்த படத்தில் கதிர், ஓவியா ஜோடி சேர்ந்தனர். இதில கதிருக்கு அண்ணனாக மெட்ராஸ் கலையரசன் நடித்திருந்தார். அந்த படம் கதிருக்கு கைகொடுத்ததோஇல்லையோ கலையரசனுக்கு கைகொடுத்தது.
அப்படத்தில் அவரது நடிப்பைப்பார்த்து விட்டுத்தான் மெட்ராஸ் படத்தில் செகண்ட் ஹீரோவாக கலையரசனை ஒப்பந்தம் செய்தார் டைரக்டர் ரஞ்சித். அதோடு, முந்தைய படத்தில் ஹீரோவுக்கு அண்ணனாக நடித்த அவரை இந்த படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடிக்க வைத்தார் ரஞ்சித். அந்த கேரக்டர் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விட்டது.
விளைவு, இப்போது கலையரசன் பல படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது தம்பியாக நடித்த மதயானைக்கூட்டம் கதிர் தற்போது கிருமி படத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் தன்னையும் கோடம்பாக்கத்தில் ஒரு ஆளாக்கி விடும் என்று எதிர்பார்க்கிறாராம் கதிர். அதனால் இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் புதிய படங்களில் கமிட்டாவேன் என்று சொல்லி தன்னை சுற்றி வரும் சில டைரக்டர்களை சுற்றலில் விட்டிருக்கிறார் கதிர்.