இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா மற்றும் காஞ்சனா 2 ஆகிய தமிழ்ப் படங்கள் தமிழ்த் திரையுலகத்தில் மிகப் பெரும் வசூல் சாதனை புரிந்த படங்களாக விளங்கின. ராகவா லாரன்ஸ் தமிழில் முதன் முதலாக முனி என்ற படத்தின் மூலம்தான் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படம் 2007ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின் முனி 2 என்று விளம்பரப்படுத்தின் அதன் பின் அதில் காஞ்சனா என்பதையும் சேர்த்துக் கொண்டு முனி 2 - காஞ்சனா என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் 2011ம் ஆண்டு வெளிவந்தது. அத்துடன் முனி படத்தின் தொடர்ச்சியைக் கைவிட்டு காஞ்சனா 2 என்ற படத்தை இயக்கி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டார்.
அடுத்ததாக காஞ்சனா 3 படத்தைத்தான் ராகவா லாரன்ஸ் இயக்கப் போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், மூன்றாம் பாகத்தைக் கைவிட்டு இப்போது அதற்கு நாகா என்ற புதிய பெயரைச் சூட்டியிருக்கிறார். முனி படத்தின் இரண்டு பாகங்கள், காஞ்சனா படத்தின் இரண்டு பாகங்கள்தான் இதுவரை வெளிவந்தன. அதன்பின் அவர் மூன்றாவது பாகத்தைத் தொடரவில்லை. நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் நாகா படத்தின் அடுத்தடுத்த பாகங்களைத் தொடர்ந்து இயக்கப் போவதாக அறிவித்தார்.
ஆமாம், ராகவா லாரன்ஸ் கடந்த வருடம் ஒரே டிக்கட்டில் இரண்டு படம் என கிழவன், கருப்பு துரை ஆகிய படங்களை இயக்கப் போவதாக இதே மாதிரி ஒரு நட்சத்திர ஓட்டலில் அறிவித்தீர்களே. அதன் பின் அந்தப் படங்கள் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இப்போது அவைதான் மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா என பெயர் மாறி வேறு உருவில் வருகிறதோ....?