Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சாஹசம்' மோஷன் போஸ்டரை வெளியிடும் சிம்பு!

04 ஆக, 2015 - 16:02 IST
எழுத்தின் அளவு:
Simbu-to-unveil-Saahasam-motion-poster

நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜனின் மகன் பிரஷாந்த். தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வந்த பிரஷாந்த், தற்போது நடித்து வரும் புதிய படம் ''சாஹசம்''. பிரசாந்துக்கு ஜோடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அழகி அமென்டா நடிக்கிறார். ஒரு பாடலுக்கு பிரசாந்துடன் பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி இப்படத்தில் நடனம் ஆடியுள்ளார். சாஹசம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜப்பான் நாட்டில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இன்னொரு பக்கம் போஸ்ட்புரடக்ஷன் வேலைகளும் நடைபெற்று வருகின்றன.


சாஹசம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் பிரசாந்த் மற்றும் தியாகராஜன் இருவரும். சாஹசம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


இந்நிலையில் சாஹசம் படத்தின் மோஷன் போஸ்டரை நாளை(ஆகஸ்ட் 5ம் தேதி) வெளியிட உள்ளனர். நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து சரியாக மாலை 7.00 மணியளவில் சாஹசம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார்.


புதியவர் அருண் ராஜ் வர்மா இயக்கியிருக்கும் ''சாஹசம்'' படத்தை தியாகராஜன் தனது ஸ்டார் மூவிஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in