ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டாம் க்ருஸ், ரெபேக்கா ஃபெர்குசன், சைமன் பெக் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகமாய் வெளிவரும் திரைப்படம் 'மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்' (MissionImpossible: Rogue Nation). ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தியாவில் Viacom18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு இயக்குனரின் படைப்பு ஆக்கத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர் டாம் க்ரூஸ். அவ்வகையில், இரத்தத்தை உறைய வைக்கும் Action காட்சிகளுக்காகவும், மெய் சிலிர்க்க வைக்கும் சாகச கட்சிகளுக்காகவும் தனக்கென ரசிகரக்ளை கொண்டுள்ள மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகத்தை கிரிஸ் மெக்குவாரி இயக்கியுள்ளார்.
“மிஷன் இம்பாசிபிளின் இப்பாகத்தை இயக்குவது மிகவும் சவாலான ஒரு பணியாக இருந்தது. கதாநாயகன் டாம் க்ரூஸ் நடித்திருக்கும் ஈத்தன் ஹன்ட் கதாபாத்திரத்திற்கு இணையாக படத்தில் இருக்கும் அனைவருக்கும் முக்கித்துவம் தரும் வகையில் திரைக்கதை எழுதியுள்ளேன். மேலும், ஈத்தன் ஹன்ட் கதாப்பாத்திரத்தின் வலிமைக்கு சவால் விடும் வகையில் இல்சா ஃபாஸ்ட் என்ற கதாப்பாத்திரம் அமைத்திருக்கிறோம். முந்தைய பாகங்களில் முக்கிய பாத்திரங்களில்தான் ஒரு பெண் நடிகர் வருவார். இம்பாசிபிள்:முரட்டு தேசம்' படத்தில் கதாநாயகியாக இல்சா ஃபாஸ்ட் கதாப்பாத்திரம் இருக்கும்.”
“பயங்கரவாத கும்பலைத்தேடி IMFன் அடுத்த இலக்கு என 'கோஸ்ட் புராட்டக்கால்' படத்தின் இறுதியில் குறிப்பிட்டிருக்கும். அதை அடிப்படையாகக் கொண்டு 'முரட்டு தேசம்' எடுக்கப்பட்டுள்ளது.” எனக் கூறுகிறார் இயக்குனர் கிரிஸ் மெக்குவாரி.