'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் முனி. இப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான 'காஞ்சனா' படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. காஞ்சனாவின் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு முன் வெளியான காஞ்சனா-2 படமோ 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. காஞ்சனா-2 படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து அடுத்து 'மொட்ட சிவா கெட்ட சிவா', 'நாகா' என இரண்டு படங்களை இயக்கி, நடிக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்.
இந்த இரண்டு படங்களையும் வேந்தர் மூவீஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது. 'காஞ்சனா' படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக லட்சுமி ராய் நடித்திருந்தார். 'காஞ்சனா-2'வில் டாப்சி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தார்கள்.
ராகவா லாரன்ஸ் அடுத்து இயக்கி நடிக்கும் 'மொட்டை சிவா கெட்ட சிவா' படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். வேந்தர் மூவிஸ் தயாரித்துள்ள பாயும்புலி படத்துக்கு ஒன்றரை கோடி சம்பளம் வாங்கிய காஜல் அகர்வால் இந்தப்படத்துக்கு 2 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். ராகவா லாரன்ஸ் இயக்கப் போகும் இன்னொரு படமான 'நாகா'வில் முன்னணி கதாநாயகி நடிக்கிறார். அவரது பெயரை விரைவில் அறிவிப்பார்களாம்.