பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புலிக்கும் தமிழ் சினிமாவுக்கும் அப்படி என்ன பந்தமோ தெரியவில்லை. சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு புலி என்ற தலைப்பு, சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு பாயும்புலி என்ற தலைப்பு. இந்த இரண்டுக்கும் இடையில் புதுமுகங்கள் உருவாக்கும் படத்திற்கு ''சூரப்புலி'' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
பூபதி பாண்டியன், பத்மாமகன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த வி.ஆனந்த் சக்கரவர்த்தி இயக்கும் படம். ஆதித்யா என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறர். தெலுங்கு நடிகை வித்யா தமிழில் அறிமுகமாகிறார். இவர்கள் தவிர இமான் அண்ணாச்சி, யோகி பாபு, ஜான் விஜய், மதுசூதனராவ் நடிக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார், நவின் இசை அமைக்கிறார். நரசிம்மா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தேஜா தயாரிக்கிறார்.
"மதுரையை கதை களமாக கொண்ட ஆக்ஷன் படம். மெக்கானிக் ஷெட்டில் பிறந்து வளர்ந்த ஒருவனை சுற்றி நடக்கும் கதை. மதுரையில் இதுவரை படப்பிடிப்பு நடந்திராத பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். வழக்கமான மதுரை பின்னணி படங்களிலிருந்து மாறுபட்டிருக்கும். புலி மற்றும் பாயும்புலி படங்களுக்கு போட்டியாக தலைப்பு வைக்கவில்லை. இந்த தலைப்பு நாங்கள் முன்பே முடிவு செய்திருந்தது" என்கிறார் இயக்குனர் ஆனந்த் சக்கரவர்த்தி.