டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கொலவெறி பாடலின் மூலம் உலக புகழ் பெற்ற இளம் இசையமைப்பாளர் அனிருத் கோலிவுட்டில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து வருகின்றார். நடிகர் விஜய்யின் கத்தி படத்திற்கு இசையமைத்த அனிருத் அடுத்து நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் படத்திற்கு இசையமைக்கின்றார். இந்நிலையில் அனிருத் டோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகனான நிதின் படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் இப்படத்தில் நிதினுக்கு ஜோடியாக நடிகை சமந்தாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணா ஹரிக்கா அன்ட் ஹாசினி கிரியேசன்ஸ் சார்பில் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் செப்டம்பர் மாதத்தில் துவங்கும் என கூறப்படுகின்றது. ஏற்கனவே இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நடிகர் அஜித் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்ததால் ராம் சரண் பட வாய்ப்பை அனிருத் தவிர்த்தார் என்றும் கூறப்படுகின்றது.