ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
த்ரிஷ்யம் படம் அமோக வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, அஜய் தேவ்கன், மிலன் லுத்ரியாவின் இயக்கத்திலான பாட்ஷாஹோ படத்தில் மிக உற்சாகத்துடன் பங்கேற்று வருகிறார். இந்த படத்தின் சூட்டிங்கை, நவம்பர் இறுதிக்குள் முடிக்க அக்ஷய் திட்டமிட்டுள்ளார். பின் தனது கனவுப்படமான "ஷிவாய்" படத்தின் சூட்டிங்கை, டிசம்பரில் துவக்க உள்ளார். ஷிவாய் படத்தின் ஆயத்தப்பணிகளை, ஒரு வருடத்திற்கு முன்பே துவக்கிவிட்டேன். இந்த டிசம்பரில் சூட்டிங்கை துவக்கி, 2016ம் ஆண்டு தீபாவளியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தில், சயீஷா புதிதாக அறிமுகமாகிறார். படத்தில் அவரது நடிப்பை பார்த்தால், அவர் புதுமுக நடிகை என்றே கூறமாட்டார்கள். அவ்வளவு இயல்பாக அவரது நடிப்பு உள்ளது. படத்தில் நடிக்கவும், இயக்கவும் செய்ய இருக்கிறேன், அது புதுவித அனுபவமாக இருக்கும் என்று அஜய் தேவ்கன் கூறினார்.