இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என விஜயசேதுபதி நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடித்து வந்தன. ஆனால் ரம்மிக்கு பிறகு அவர் நடித்த படங்களின் வெற்றி வாய்ப்புகள் குறையத் தொடங்கின. குறிப்பாக அவர் பெரிதும் எதிர்பார்த்த வன்மம், பண்ணையாரும் பத்மினியும், புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்கள் அதிர்ச்சி தோல்வியை கொடுத்தன.
இதையடுத்து அவர் கைவசம் பல படங்கள் உள்ளன என்றபோதும், கடைசியாக அவரே தயாரித்து, வசனம், பாடல்கள் எழுதி நடித்த ஆரஞ்சு மிட்டாய் படம் ஓரிரு நாட்கள்கூட தியேட்டர்களில் நிற்க முடியாமல் ஓட்டம் பிடித்தது விஜயசேதுபதிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. நல்ல படம் என்கிற விமர்சனங்கள் வந்தபோதும், படத்தில் கமர்சியல் என்பதே இல்லை என்பதால் ரசிகர்களை அப்படம் கவரவில்லை.