ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் மற்றும் பலர் நடித்து அடுத்த மாதம் வெளிவர உள்ள ஃபேன்டஸி திரைப்படம் 'புலி'. இரு தினங்களுக்கு முன்புதான் இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. தமிழில், விஜய் நடித்து இதுவரை வெளிவராத ஒரு புதிய கதையாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஜோடியாக முதன் முறையாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீதேவி தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் என்பதெல்லாம் இந்தப் படத்தின் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும்.
'புலி' படத்திற்கான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய உரிமைகள் ஏற்கெனவே விற்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் என தெலுங்கிற்குத் தெரிந்த பல முகங்கள் படத்தில் இருப்பதாலும், ஒரு ஃபேன்டஸி கதை என்பதாலும் தெலுங்கில் இப்படத்தின் டப்பிங் உரிமையை வாங்க பலத்த போட்டி ஏற்பட்டதாம். கடைசியில் 'துப்பாக்கி' படத்தை தெலுங்கில் வாங்கி வெளியிட்ட நிறுவனம் 'புலி' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை சுமார் 8 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் சிலரோ இந்த விலை குறைவான விலைதான் என்றும் கூறுகிறார்கள்.
விஜய் நடித்து சமீபத்தில் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியான 'ஜில்லா' படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 'புலி' படத்தின் கதை கண்டிப்பாகத் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்கும். அன்றைய கிளாமர் நாயகி ஸ்ரீதேவி, இன்றைய கிளாமர் நாயகிகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோரும் படத்தில் இருப்பதால் 'புலி' படம் நிச்சயம் நல்ல வெற்றி பெறும் என்றே சொல்கிறார்கள். படத்தை வாங்கிய வினியோகஸ்தர் படத்தை சரியாக மார்க்கெட்டிங் செய்து வெளியிட்டால் 'ஜாக்பாட்' அடிப்பார் என்கிறார்கள்.