வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
உண்பதற்கு மீனைக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது சிறந்தது, அள்ளிக் கொடுப்பதை விட கற்றுக் கொடுப்பது மேலானது என்பதற்கேற்ப சினிமாவைக் கற்றுக் கொடுக்க பாரதிராஜா ஒரு பிலிம் இன்ஸ்டிடியூட் தொடங்குகிறார் இதற்கான வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. இந்த பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்பு, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு என்று ஐந்து பெரும்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
திரையரங்கம், விரிவுரைக் கூடம், செயல் விளக்க அறைகள், படப்பதிவுத் தளம், ஒலிப்பதிவுக் கூடம் போன்றவை நம்நாட்டில் எங்கும் இல்லாத அளவில் உலகத்தரத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் பிரதான பகுதியான அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயம் பகுதியின் அருகே இது அமைக்கப்பட்டு வருகிறது. பாடம் நடத்தவும் விரிவுரை செய்யவும் திரையுகின் பிரபலங்கள் விருப்பமுடன் தங்கள் பங்களிப்பைச் செய்யவிருக்கிறார்கள்.