'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
அமராவதி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அஜித்குமார், இன்றுடன் (ஆகஸ்ட் 03ம் தேதி) திரையுலகிற்கு வந்து, 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
21 வயதில், அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித் குமார், இன்று கோடான கோடி இளைஞர்களின் அசைக்க முடியாத தல ஆக விளங்குகிறார்.
அஜி்த்தின் ரசிகர்கள், அஜித்தை, அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகவே கருதி வருகிறார்கள்...
ஒரு படம் வெற்றிபெற்றால், அந்நடிகரை உச்சாணிக்கொம்பில் ஏற்றிவைப்பதும், படம் தோல்வியடைந்துவிட்டால், அவரை பூசி மொழுகிவிடுவதும், கோலிவுட் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களுக்கு உரித்தான குணம்.
ஆனால், அந்த பழக்கத்தை தகர்த்து எறிந்தவர் அஜித் குமார் மட்டுமே. அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வரலாறு படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான திருப்பதி, ஆழ்வார், ஜி, ஏகன், அசல், ஜனா உள்ளிட்ட படங்கள் தொடர்தோல்வி அடைந்தபோதிலும், அவரது ரசிகர்கள் துவண்டு விடவில்லை.
மங்காத்தா வெற்றியின் மூலம் மீண்டும் அஜித் வெற்றியின் உச்சத்திற்கு சென்றார். பின் வெளிவந்த பில்லா 2, ஆரம்பம் படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை.அதன்பின் வீரம், என்னை அறிந்தால் படங்கள் அவரின் ரசிகர்களுக்கு சிறப்பான விருதாக அமைந்தன.
வெற்றி, தோல்விகளை சரிசமமாக பாவித்துள்ள அஜித் குமார், எளிமையின் மறுஉருவமாக திகழ்ந்து வருவதே, அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து தரப்பு மக்களுக்கும், அவரை பிடிக்க முக்கிய காரணமாக உள்ளது.
அஜித் குமார், திரையுலகிற்கு வந்து 23 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், அவரது ரசிகர்கள் டுவிட்டரில், #23YearsOfInvincibleAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, தேசிய அளவில் அதை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
அஜித் குமார், தற்போது சிறுத்தை, வீரம் படங்களை இயக்கிய சிவாவின் இயக்கத்தில் தல 56 படத்தில் நடித்து வருகிறார்.