தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'பையா, சிறுத்தை' ஆகிய படங்களில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர் தமன்னா. அதன் பின் திடீரென எழுந்த காதல் கிசுகிசுவால் தமிழ்ப் படங்களில் நடிப்பதையே தவிர்த்தவர் தமன்னா. இப்போது நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்திற்கு தெலுங்கில் மட்டும் 'தோஸ்த்' என பெயர் வைத்திருக்கிறார்கள். ஒரு பிரெஞ்சுப் படத்தின் தழுவலாகத்தான் இந்தப் படம் உருவாவதாகச் சொல்லப்படுகிறது.
நாகார்ஜுனாவும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழில் 1997ம் ஆண்டு வெளிவந்த 'ரட்சகன்' படத்திற்குப் பிறகு சுமார் 18 வருடங்கள் கழித்து இப்போதுதான் நேரடித் தமிழ்ப் படம் ஒன்றில் நாகர்ஜுனா நடிக்கிறார். அதற்கு முன் தெலுங்கிலிருந்து தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்த 'இதயத்தை திருடாதே, உதயம்' ஆகிய படங்கள் தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களாக அமைந்தது.
ஹைதராபாத்தில் ஆரம்பமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. அங்கு கடந்த 15 நாட்களாக படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். மேலும் சில இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.