'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பாகுபலி' திரைப்படம் வெளிவந்து 3 வாரங்கள் முடிந்து நான்காவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத் வைத்துள்ளது. இந்த வார முடிவில் இப்படம் சுமார் 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிடும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இதுவரை இந்தியாவில் அதிக வசூலைக் குவித்த படமாக இருந்து வந்த 'பிகே' படத்தின் சாதனையை 'பாகுபலி' படம் முறியடித்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பிகே' படம் இந்தியாவில் மட்டும் சுமார் 330 கோடிகளை வசூல் செய்து இந்திய வசூல் சாதனையில் முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது 'பாகுபலி' படம் சுமார் 340 கோடி ரூபாயை 24 நாட்களில் வசூல் செய்து அந்த சாதனையை முறியடித்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள். சுமார் 480 கோடி வரையில் நேற்று வரையிலான வசூலும், வினியோகஸ்தர்கள் பங்குத் தொகையாக சுமார் 250 கோடி வரையும் படம் வசூலித்துள்ளதாம்.