சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
அனூப் மேனனை பற்றிய ஒரு சின்ன இன்ட்ரோ... நம்ம ஊரில் சமுத்திரக்கனி மாதிரி மலையாளத்தில் தன்னம்பிக்கை தருகின்ற கேரக்டர் என்றால் கூப்பிடுங்கள் அனூப் மேனனை என்று சொல்லும் அளவுக்கு நடிப்பால் அசத்தும் மனிதர். ட்ராபிக் படத்தில் போலீஸ் அதிகாரியாக, '1983' படத்தில் கிரிக்கெட் கோச்சாக கலக்கிய அனூப் மேனன், கடந்த வருடம் சூப்பர்ஹிட்டான 'விக்ரமாதித்யன்' படத்தில் நெகட்டிவ் ரோலில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மோகன்லாலுடன் இணைந்து சில படங்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும் அவையெல்லாம் சின்னச்சின்ன ரோல்கள் தான்.
ஆனால் தற்போது பத்மகுமார் இயக்கத்தில் 'கனல்' படத்தில் மோகன்லாலுடன் படம் முழுவதும் கூடவே ட்ராவல் பண்ணுகிற கேரக்டரில் நடிக்கிறார் அனூப் மேனன். மோகன்லாலுடன் நடித்த, பழகிய அனுபவங்களை பற்றி கேட்டால் முகத்தில் சந்தோசம் கொப்பளிக்கிறது அனூப் மேனனுக்கு.. “மோகன்லாலிடம் எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று அவர் எந்த விஷயத்தையும் நெகட்டிவாக பேசவோ, சிந்திக்கவோ மாட்டார்.. இன்னொன்று யாரைப்பற்றியும் புறம் கூறும் பழக்கம் அவரிடம் இல்லை.. அவரது முகத்தை பார்க்கும்போது காலையில் உதிக்கும் சூரியனின் பிரகாசம் தெரிவது உண்மை” என்கிறார். அட... ஒரு ஹீரோயின் கூட, தன்னுடன் நடிக்கும் ஹீரோவை இப்படி புகழ்ந்தது இல்லையேப்பா..