'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட்டடித்தபோது அந்த படத்தில் நாயகியாக நடித்த ஸ்ரீதிவ்யா பரபரப்பான நடிகையானார். அதனால் பல படங்கள் அவருக்கு கமிட்டாகின. அதையடுத்து மீண்டும் அதே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக காக்கி சட்டை படத்தில் நடித்தபோது கோலிவுட்டில் முக்கிய இடத்தை கைப்பற்றி விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் தோல்வியடைந்து ஸ்ரீதிவ்யாவின் காலை வாரிவிட்டது. இதனால் வேகமாக சென்று கொண்டிருந்த அவரது வேகம் குறைந்தது. ஆனபோதும், காக்கி சட்டையில் நடித்து வந்தபோதே கமிட்டான, பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்திக், காஷ்மோரா போன்ற படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ரீதிவ்யா. ஆனால் இந்த படங்களில் காஷ்மோராவில் முக்கிய நாயகியாக நயன்தாரா இருக்கிறார். அதேபோல் பெங்களூர் டேய்ஸ் ரீமேக்கில் நயன்தாரா, சமந்தா, ராய் லட்சுமி, பார்வதி என பல நடிகைகள் உள்ளனர். அதனால் இந்த இரண்டு படங்களிலுமே வெயிட்டான வேடங்கள் ஸ்ரீதிவ்யாவுக்கு தரப்படவில்லையாம். அதனால் இப்போது அவருக்கு தமிழ் சினிமா மீதான நம்பிக்கை ரொம்பவே குறைந்து விட்டது. அதனால் இங்கு நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது தாய்மொழியான தெலுங்கில் புதிய படங்களை கைப்பற்றி விட வேண்டும் என்று கல்லெறியத் தொடங்கியிருக்கும் ஸ்ரீதிவ்யா, சென்னையில் இருந்த தனது முகாமை ஐதராபாத்துக்கு இடமாற்றம் செய்துவிட்டார்.