ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்த பிரேமம் திரைப்படம் மலையாள திரை உலகில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. ஸ்ரவந்தி ரவி கிஷோர் பிரேமம் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். தற்போது இப்படத்தை இயக்குநர் சண்டூ மொண்டேடி இயக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவர் நடிகர் நிகில் மற்றும் நடிகை ஸ்வாதி நடிப்பில் இயக்கிய கார்த்திகேயா திரைப்படம் டோலிவுட்டில் வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சண்டூ மொண்டேடி பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கவுள்ளார். நடிகர் நாக சைதன்யா பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது. இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் தமிழில் உருவாகும் அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிகர் நாகசைதன்யா நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது .