தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளிவரவுள்ள ஸ்ரீமந்துடு படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடிகர் மகேஷ் பாபு, நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் மகேஷ் பாபு உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த பூரி ஜெகன்நாத் மகேஷ் பாபு ஒரு கடின உழைப்பாளி, நடிப்பில் அவருக்குள்ள அர்ப்பணிப்பு என்னை பலமுறை பிரமிக்க வைத்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் மகேஷ் பாபு உள்ளிட்ட ஸ்ரீமந்துடு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த பூரி ஜெகன்நாத் தானும் ஸ்ரீமந்துடு படத்தை திரையில் காண ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார். மகேஷ் பாபு மைத்திரி மூவிஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் கொரடலா சிவா இயக்கியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.