தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் ஜெயம் ரவி, தனது உடன்பிறவா தம்பி என்று நடன இயக்குநர், நடிகர் இயக்குநர் என்று படிப்படியாக முன்னேறி, தற்போது தயாரிப்பாளாராக உயர்ந்துள்ள பிரபுதேவா தெரிவித்துள்ளார்.
"Prabhu Deva Studios" என்ற பெயரில், பிரபுதேவா, புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை சமீபத்தில் துவக்கினார். இந்த நிறுவனம், தற்போது 3 படத்தயாரிப்புகளில் களமிறங்கியுள்ளது.
சென்னையில், இப்படக்குழுவினரை அறிமுகம் செய்துவைத்து பிரபுதேவா பேசியதாவது, நடிகருக்கு என்றால் ஒரு கஷ்டம் இருக்கும், இயக்குநர் என்றால் ஒரு கஷ்டம் இருக்கும். ஆனால் தயாரிப்பாளருக்கு எல்லாவித கஷ்டமும் இருக்கும் என்று தயாரிப்பாளர் ஆன பிறகுதான் தெரிந்துகொண்டேன். இன்னும் ஒரு படம் கூட தயாரிக்கவில்லை, ஆனால், அதற்குள்ளே என்னுள் டென்சன் உருவாகிவிட்டது.
நான் தயாரிப்பாளர் ஆனதற்கு முழுமுதற்காரணம் ஐசரி கணேஷ் தான்.
அமலா பால் தயாரிப்பில், பிரியதர்ஷன் இயக்க உள்ள படத்தில் இணை தயாரிப்பாளர் ஆகியுள்ளேன். எனது சினிமா குரு யார் என்றால் அது பிரியதர்ஷன் தான். நான் அவரை தேர்ந்தெடுத்தேன் என்று சொல்வதைவிட, அவர் தான் என்னை தேர்ந்தெடுத்தார் என்று சொல்ல வேண்டும். அவர் மிகவும் இயல்பானவர், அவரது சமையல் சூப்பராக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்ற இருப்பது பெருமையாக உள்ளது.
நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா எனினும், எனக்கு ஜெயம் ரவி, உடன்பிறவா தம்பி ஆவார்.
ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றியை தொடர்ந்து லட்சுமண் இயக்கத்தி்ல், ஜெயம் ரவியின் நடிப்பில், இமானின் இசையமைப்பில் உருவாகும் படத்தை தயாரிக்கிறேன்...
அடுத்ததாக, இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் உதவி இயக்குநர் விக்டர் ஜெயராஜ் இயக்கத்தில், ஐசரி வேலனின் பேரன் வருண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக பிரபுதேவா கூறினார்.