தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவில் படத்திலும் நிஜத்திலும் தங்களது நட்பை தொடர்ந்துகொண்டிருக்கும் மும்மூர்த்திகள் மற்றும் அவர்களது ஆஸ்தான இயக்குனர்களின் நட்பை பற்றி இப்போது கூறுவது மிகச்சரியாக இருக்கும்.
மோகன்லால் - ப்ரியதர்ஷன்
தமிழுக்கு ரஜினிகாந்த் - எஸ்.பி.முத்துராமன் போல மலையாளத்தில் கடந்த 30 வருடங்களாக இணைபிரியாத கூட்டணி இது. பிரியதர்ஷன் இதுவரை தான் இயக்கியுள்ள 73 படங்களில் மோகன்லாலை வைத்து மட்டுமே சுமார் 27 படங்களில் பணியாற்றியுள்ளார். இதோ அடுத்து புதிய படத்திற்கு தயாராகி வருகிறார்கள் இருவரும்.. இருவரின் வளர்ச்சியில் இருவருக்குமே சமபங்கு உண்டு.. படம் வெற்றியோ, தோல்வியோ அதைத்தாண்டிய நட்பும் புரிதலும் தான் இவர்களை இத்தனை வருடம் நட்பு சங்கிலியால் கட்டி வைத்துள்ளது.
மம்முட்டி - ஜோஷி
மலையாள சினிமாவில் ஆக்ஷன் பட டைரக்டர்களில் முன்னணியில் இருப்பவர் டைரக்டர் ஜோஷி. கிட்டத்தட்ட 34 வருடங்களாக மலையாள சினிமாவின் முடிசூடா மன்னனாக இருக்கிற ஜோஷி, மலையாளத்தின் அனைத்து ஹீரோக்களையும் இயக்கியவர். தவிர மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டிலும் பெயரெடுத்தவர். இருந்தாலும் இவரது பேவரைட் ஹீரோ என்றால் அது மம்முட்டி தான். இதுவரை மம்முட்டியை வைத்து 32 படங்களை இயக்கியுள்ள ஜோஷி 1984-85 ஆகிய இரண்டு வருடங்களில் மட்டுமே மம்முட்டியை வைத்து தொடர்ந்து 15 படங்கள் இயக்கியுள்ளார் என்றால் இவர்களது நட்பை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்..
சுரேஷ்கோபி - ஷாஜி கைலாஷ்