ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கன்னட நடிகர் உபேந்ராவின் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற உபேந்ரா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகின்றது. 1990களில் தெலுங்கு படங்களில் நடித்த நடிகர் உபேந்ரா தற்போது தான் நடித்துவரும் உபேந்ரா 2 படத்தை நீண்ட இடைவெளிக்கு பின்னர் டோலிவுட்டில் திரையிடவுள்ளார்.உபேந்ரா எழுதி இயக்கும் இப்படத்தில் நடிகைகள் கிறிஸ்டினா அக்ஹீவா மற்றும் பருள் யாதவ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து புகழ்பெற்ற நல்லமல்லப்பு புஜ்ஜி இப்படத்தை தாயரிக்கின்றார். 2001 ஆம் ஆண்டு உபேந்ரா நடிப்பில் வெளிவந்த ரா படத்தின் வாயிலாக கன்னட திரை உலகில் தயாரிப்பாளராக அறிமுகமான புஜ்ஜி தற்போது மீண்டும் உபேந்ரா படத்தில் தயாரிப்பாளராக இணைந்திருப்பது குறித்து புஜ்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உபேந்ரா 2 படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பித்துள்ளன. விரைவில் இப்படம் டோலிவுட்டில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.