மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த படம் கோ. அவருடன் அஜ்மல், கார்த்திகா, பியா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். அப்படம் மெகா ஹிட்டானது என்றபோதும் அதன் 2ம் பாகத்தை எடுப்பது பற்றி கே.வி.ஆனந்த் முயற்சிக்கவில்லை.
அதனால் இப்போது கோ படத்தின் 2ம் பாகத்தை எல்ரட்குமார் தயாரிக்க, சரத் என்ற புதியவர் இயக்குகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் ஜீவா நடித்த வேடத்தை பாபி சிம்ஹா தொடருகிறார். ஆனால் அவர் ஸ்டில் போட்டோகிராபராக நடித்தார். இவரோ வீடியோகிராபராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக டார்லிங் நிக்கி கல்ராணி நடிக்க, முதல் பாகத்தில் நடித்த பிரகாஷ்ராஜ் இந்த பாகத்திலும் மிரட்டலான அரசியல்வாதியாக நடிக்கிறார்.
இதுவரை எத்தனையோ மாறுபட்ட வில்லன் வேடங்களில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், இந்த படத்தில் அதிரடியான அரசியல்வாதியாக நடிக்கிறாராம். அவர் செய்யும் சில சமூகவிரோத செயல்களை பாபிசிம்ஹா வீடியோவில் எடுத்துவிட, அவருக்கும், இவருக்கும் பூதாகரமாக பிரச்சினை வெடிக்கிறதாம். அதனால் ஆரம்பத்தில் சாதுவான அரசியல்தலைவராக ஆக்டு கொடுக்கும் பிரகாஷ்ராஜ் பின்னர் தனது சுயரூபத்தை வெளிப்படுத்தும் பிற்பாதியில் இதுவரையில்லாத மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம்.