ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி போன்று மெகா பட்ஜெட் இல்லையென்றாலும், அதேபோன்ற சரித்திர கதையில்தான் விஜய்யின் புலி படமும் உருவாகியிருக்கிறது. அதோடு, இதுவரை விஜய் நடித்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் இப்படம் தயாராகியிருக்கிறது. அதோடு இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளே 6 இடங்களில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மேலும், விஜய் படங்களில் இது மெகா படம் என்பதால், படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்து விட்டார்களாம். அதனால்தான் ஸ்ரீதேவியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர். அதோடு, கன்னட நடிகர் சுதீப்பை முக்கிய வில்லனாக்கியிருக்கிறார்கள். மேலும், தென்னிந்தியா மட்டுமின்றி வடஇந்தியாவிலும் தற்போது பிரபலமாகயிருக்கும் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருப்பதால் தென்னிந்தியா அளவுக்கு வடஇந்தியாவிலும் புலி படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.