இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த சரித்திர திரைப்படமான பாகுபலி உலகம் முழுவதும் இது வரை ரூ.450 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளது. பிரபாஸ்,ரானா,தமன்னா,அனுஷ்கா ஆகியோரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளிவந்த பாகுபலி படம் ஹிந்தி மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வந்தது. பாகுபலி தி பிகினிங்க் என பெயரிடப்பட்ட அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பாகுபலி தி கன்குலூசன் என பெயரிடபடுள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால் தற்போது பாகுபலி 2 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மகாபலி என புதிய தலைப்பு பரிசீலனை செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என தெரிகிறது. இப்படத்தின் நாயகன் பிரபாஸ் பாகுபலி 2 படத்திற்காக தாடி வளர்த்து வருகின்றாராம். மேலும் பாகுபலி படத்தைக் காட்டிலும் பாகுபலி 2 படத்தில் ஆஜானுபாகு உடற்கட்டுடன் தோன்ற தீவிர உடற்பயிற்சிகளிலும் பிரபாஸ் ஈடுட்படுள்ளாராம்.